1 மற்றும் 2 திமோதி மற்றும் டைடஸ்
பவுல் தன்னுடைய வாழ்நாளின் இறுதிக் கட்டத்திற்கு வந்ததால், அவன் விசுவாசத்தில் தன்னுடைய “குமாரரான” தீமோத்தேயுவுக்கும் தீத்துவுக்கும் இவ்வாறாக எழுதினான். இந்த அனுபவம் வாய்ந்த அப்போஸ்தலன், இந்த இளைய சுவிசேஷகர்களை எபேசுவிலும் மற்றும் கிரேத்தாத் தீவிலும்நடைபெறுகின்ற தங்களுடைய அந்தந்த ஊழியங்களை ஊக்குவிக்கவும் வழிகாட்டவும் விரும்பினான். கர்த்தருடைய சபைக்கு செயலூக்கம் உடைய மற்றும் கனி தரும் ஊழியத்தை வழங்கும்படியும், மற்றும் சத்தியத்தைப் பிரசங்கிப்பதை விட்டு விடாமலும், மற்றும் தவறானவற்றை மறுக்கும் படியும் அவன் விரும்பினான். தெய்வீக ஈர்க்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி வாழ்வது என்பதற்கான இந்த வழிமுறைகளை அவன் வலியுறுத்தினான். தேவன் தம்மிடம் காட்டியுள்ள இரக்கத்தைப் பவுல் வலியுறுத்தினான், மற்றும் சகோதரர் சத்தியத்தைப் பேணவும், பாதுகாக்கவும், கடைப்பிடிக்கவும் வேண்டும் என்று தன்னுடைய கரிசனையை வெளிப்படுத்தினான்.
இந்த மூன்று நிருபங்களையும் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து, போதித்த பிறகு, டேவிட் ரோப்பர் ஒரு சிறந்த வசனம்-மூலம்-வசன ஆய்வு ஒன்றை உருவாக்கினார். ரோப்பரின் தெளிவான எழுத்து நடையுடன், கதை மற்றும் வார்த்தை ஆய்வுகள் உயிர் பெற்று நிற்கின்றன.
தேவனுடைய வார்த்தையின் மாணாக்கர்கள், விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு என்று சொன்ன பவுலுடன் இணைவதற்காக, தேவனுடன் இன்னும் நெருக்கமாக நடந்துகொள்வதற்காக, இந்த நிருபங்களை விடாமுயற்சியுடன் வாசிக்கும்படியாக, மீண்டும் மீண்டும் இழுக்கப்படுவார்கள். (பார்க்க1 தீமோ. 6:12, 2 தீமோ. 4:7).













