Through the Scriptures குறித்து

“அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி” (2 தீமோத்தேயு 2:2).

Through the Scriptures, ஸர்ஸி, அர்க்கன்ஸாஸ்-இல் உள்ள இன்றைக்கான சத்தியம், பன்முக, இலாப நோக்கமற்ற, மதப்பிரச்சாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஸ்தாபனத்தின் ஒரு பணியாகும். ஹார்டிங் பல்கலைக் கழகத்தில் பைபிள் மற்றும் உபதேச வகுப்புகளின் பேராசிரியராக உள்ள எட்டி க்ளோயர் அவர்களின் இயக்கத்தின் கீழ் இயங்கும் TFT, நமது இறைவனின் பரிசுத்த வேதாகமத்தை உண்மையுடன் போதிக்க பாடுபடுகிறது.

உலகம் முழுதும் உள்ள கிறிஸ்துவ சபைகளின் உயிரூட்டமும் ஆன்மீக வளர்ச்சியும் பைபிள்-கல்விப் புத்தகங்களின் தரத்தைப் பொருத்திருக்கும் என்பதை அனுபவமிக்க மிஷனரிகள் ஒப்புக் கொள்கின்றன. இன்றைக்கான சத்தியம் இத்தேவையை உரையாற்றுவதில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

போதிக்கும் பாடங்கள் கிறிஸ்த்துவத்தின் புதிய ஏற்பாட்டின் மறுசீரமைப்போடு இணக்கமாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்காக குறிப்பிட்ட உள்ளடக்க வழிகாட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, (அ) இப்பாடங்கள் புதிய ஏற்பாடு தேவாலயத்தை மதிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உள்ளன, மேலும் மதப்பிரிவினைக்கு அனுமதி அல்லது நம்பிக்கையை அளிக்கக்கூடாது; அதாவது, மனிதனால் உருவாக்கப்பட்ட சமயச் சங்கங்கள்; (ஆ) இப்பாடங்கள், அடிப்படையான, பாதுகாப்பான மற்றும் நடமுறைக்கேற்ற வகையில் பைபிளின் உபதேசங்களை விளக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்; (இ) வேதாகமத்தில் உபதேசித்துள்ளபடி, நம்பிக்கை, மனந்திருந்துதல், இயேசு கிறிஸ்துவின் ஒப்புதல், மற்றும் பாவ மன்னிப்பிற்கான ஞானஸ்நானம் முதலிய இரட்சிப்பின் வழிகளில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்; (ஈ) இப்பாடங்கள், புதிய ஏற்பாடு முறைப்படி இறைவனை வழிபடுவதை மேம்படுத்த வேண்டும், மேலும் மனிதனின் எவ்வித கண்டுபிடிப்புக்கும் எந்த விதமான அனுமதியையும் வெளிப்படுத்தக்கூடாது; (உ) இப்பாடங்கள், எந்தக் கலாசாரத்துக்கும் பொருத்தமாக பொருந்தக்கூடிய நித்தியக் கொள்கைகளைக் கொண்ட உலகளாவிய கிறிஸ்த்துவத்தின் புதிய ஏற்பாடுக்காக வாதாட வேண்டும், அமெரிக்க கிறிஸ்த்துவத்துக்காக வாதாடக்கூடாது.