பிரசங்கி மற்றும் சாலமோனின் பாடல்

வாழ்க்கை மற்றும் அன்பின் அர்த்தம் குறித்து குழப்பத்துடன் உலகில் வாழும் கிறிஸ்த்துவர்களுக்கு ஞான இலக்கியத்தின் இவ்விரு புத்தகங்களும் இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. பிரசங்கி புத்தகத்தில், தன்னல ஆசையினாலான ஒரு பயனற்ற வாழ்க்கையை தவிர்த்து ஒவ்வொரு செயலையும் தீர்ப்புக்கு உட்படுத்துகின்ற இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழுமாறு   சாலமோன் (“போதனையாளர்”) நம்மை எச்சரிக்கிறார். பிறகு, சாலமோனின் பாடலில், அன்பின் நல்லொழுக்கங்களையும் மற்றும் வெற்றிகரமான ஒரு திருமண உறவை கட்டுவது குறித்தும் அவர் கற்றுத்தருகிறார். காதல், நம்பிக்கை, மற்றும் முரண்பாட்டில் ஈடுபாடு போன்ற உறவு சார்ந்த பிரச்சினைகளை இப்புத்தகத்தின் பாடங்கள் கொண்டுள்ளன.

கவனமான ஆராய்ச்சியின் மூலம், டாக்டர் டென்னி பெட்ரில்லோ அவர்கள் இவ்விரு புத்தகங்களின் அர்த்தத்தை பிரிக்காமல் கொடுத்துள்ளார். மற்ற அணுகுமுறைகளோடு படிக்கும்போது, இறைவனுடைய வார்த்தையின் ஒருமைப்பாட்டிற்கு அளிக்கப்படும் மிகப்பெரிய மரியாதையை நிரூபிக்கும் சாலமோனின் எழுத்துக்களின் சாத்தியமான புரிதலை வழங்குவதோடு நம் காலத்திற்கு தேவையான அருமையான பாடங்களையும் அவர் அளித்துள்ளார்.


கல்விப் பிரிவுடன் எது வருகிறது?

இந்த 50-நாள் கல்விப் பிரிவானது உங்களுக்குத் தேவைப்படும் அனைத்துடனும் வருகின்றது. இந்த கல்விப் பிரிவை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் உங்களுக்குத் தேவைப்படுமானால், கூடுதலாக 30 நாட்களுக்கு உங்கள் கல்விப் பிரிவை நீட்டிக்கலாம். மாதிரி கல்விப் பிரிவு பாடங்கள் சிலவற்றைக் காண இங்கே க்ளிக் செய்க.

டிஜிட்டல் புத்தகம்

டென்னி பெட்ரில்லோ அவர்களின் பிரசங்கி மற்றும் சாலமோனின் பாடலின் ஒரு டிஜிட்டல் நகலானது உங்கள் கல்விப்பிரிவின் ஆசிரியராக இருக்கும், கல்விப்பிரிவு முடிந்த பின்னரும் அது உங்களுடையதாக இருக்கும்.

ஐந்து கல்வி வழிகாட்டிகள்

நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே மிகுந்த கவனம் செலுத்துவதற்காக முக்கியமான சொற்கள், கோட்பாடுகள், மக்கள் மற்றும் இடங்களை அளிப்பதன் மூலம் தேர்வுகளுக்காக நீங்கள் தயாராவதற்கு இவை உங்களுக்கு உதவுகின்றன.

ஆறு தேர்வுகள்

உங்களுக்கு இடையூறாக இருப்பதைவிட உங்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டது, கற்பிப்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, ஒதுக்கப்பட்ட வாசிப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஐம்பது கேள்விகளை ஒவ்வொரு தேர்வும் கொண்டுள்ளது. கடைசி தேர்வு விரிவானதாகும்.

வாசிப்பு வேக வழிகாட்டி

வாசிப்பு வேக வழிகாட்டியுடன் வாசிப்பு அட்டவணையின் உச்சத்தில் இருங்கள். விரும்பிய நேரத்தில் கல்விப் பிரிவை முடிப்பதற்கு, ஒவ்வொரு நாளும் எந்தப் பக்கங்களை நீங்கள் வாசிக்க வேண்டும் என்பதை இவ்வழிகாட்டி கூறுகிறது.