ரகசியகாப்பு கொள்கை

இது இன்றைக்கான சத்தியம் உலக ஊழியத்திற்கான பள்ளி, இன்க். (“இன்றைக்கான சத்தியம்”) -ன் வலைத்தளமாகும். இந்த வலைத்தளம் (“வலைத்தளம்”) மூலமாக நீங்கள் அளிக்கும் தகவல்களை கவனமாக பாதுகாப்பதன் மூலம் உங்கள் ரகசியகாப்புக்கு மதிப்பளிக்கிறோம். நீங்கள் எங்களிடம் கொண்டுள்ள நம்பிக்கையை பாராட்டுகிறோம். இத்தகவல்களை கவனமாகவும் கூர் உணர்வுடனும் பயன்படுத்தும் பொறுப்பு எங்களுடையது. வலைத்தளம் எந்தெந்த தகவல்களை சேகரிக்கிறது என்பதையும் அதைக் கொண்டு நாங்கள் என்ன செய்கிறோம் என்பதையும் பின்வருபவை வெளிப்படுத்துகின்றன.

வலைத்தள ரகசியகாப்பு நீங்கள் வலைத்தளத்துக்கு இணைப்பு ஏற்படுத்தும்போது, இணைய அணுகலை வழங்கும் உங்கள் கணினியின் இணைய முகவரியை (IP) நாங்கள் அடையாளம் காண்கிறோம். எங்கள் சேவையகத்தின் பிரச்சனைகளைக் கண்டறியவோ அல்லது எங்கள் வலைத்தளத்தை நிர்வகிக்கவோ IP முகவரி பயன்படுத்தப்படுகிறது. பரந்த மக்கள் தொகை தகவல்களை சேகரிக்கவும் கூட இது பயன்படலாம். ஒரு தனிப்பட்ட நபர் என்ற முறையில் உங்கள் IP முகவரியை எப்போதும் தொடர்பு கொள்வதில்லை, மேலும் வேறொரு நிறுவனத்துக்கோ அல்லது அமைப்புக்கோ அதனை அளிக்க மாட்டோம்.

மற்ற வலைத்தளங்கள் இன்றைக்கான சத்தியத்தால் இயக்கப்படாத அல்லது அதன் கட்டுப்பாட்டில் இல்லாத வேறு இணைய தளங்களுடன் வலைத்தளம் இணைப்பைக் கொண்டிருக்கலாம். இன்றைக்கான சத்தியத்துக்கு சொந்தமில்லாத தளங்களின் ரகசியகாப்பு நடைமுறைகள் அல்லது உள்ளடக்கத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் விஜயம் செய்யும் ஒவ்வொரு வலைத்தளத்தின் ரகசியகாப்பு கொள்கையை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் பயன்படுத்தல் மற்றும் வெளிப்படுத்தல் பதிவுப் படிவம், ஆணைப் படிவம், கருத்தாய்வுப் படிவம் அல்லது எங்கள் மின்னஞ்சலில் நீங்களே தெரிவித்தால் ஒழிய, உங்களுடைய தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல்களை நாங்கள் சேகரிப்பதில்லை. தொடர்பு தகவல்கள் (உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது அஞ்சல் முகவரி போன்றவை), நிதி தகவல்கள் (உங்கள் கணக்கு எண் அல்லது கடன் அட்டை எண் போன்றவை), மக்கள் தொகை ஆய்வு தகவல்கள் (உங்கள் ZIP குறியீடு அல்லது வயது போன்றவை) முதலியவற்றை அளிக்குமாறு உங்களை வலைத்தளம் கேட்கலாம் அல்லது அவ்வாறு கொடுப்பது அவசியமாகலாம். நீங்கள் கோரும் தகவல்கள், பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு இத்தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு, நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைப்பட்டியலுக்காக நிதி தகவல்கள் பயன்படுத்தப்படுகிறது. சேகரிக்கப்படும் எந்த ஒரு தகவலும் இன்றைக்கான சத்தியத்தின் முக்கியமான உள்ளக பயன்பாட்டிற்காக மட்டுமே, மேலும் வலைத்தளம் மூலமாக நீங்கள் ஆர்டர் செய்த பொருட்களை உங்களுக்கு அனுப்புவதற்காக மூன்றாம் நபருக்கு கொடுக்கப்படும் உங்கள் பெயர் அல்லது அஞ்சல் முகவரி தவிர வேறு எந்த ஒரு தகவலும் வெளி குழுவுக்கோ அல்லது அமைப்புக்கோ அளிக்கப்படுவதில்லை.

தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல் அல்லது மக்கள் தொகை ஆய்வு தகவல் (பெயர், அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்றவை) முதலியவற்றை அளிப்பது உங்கள் விருப்பத்தை பொருத்தது. இத்தகவல்களை நீங்கள் அளிப்பதால் எங்கள் பயனர்கள் யார் யார் என்பதை மிகவும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் அதனை ஊக்குவிக்கிறோம்.

இந்த தளத்திற்கு தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல்களை நீங்கள் அளித்தால், சேகரிக்கப்படும் நேரத்தில் அதை நாங்கள் குறிப்பிட்டால், செயலூக்கத்துடன் சேகரிக்கப்பட்ட மற்ற தகவல்களுடன் இத்தகவல்களை ஒன்றிணைப்போம்.

பின்வரும் காரணங்களுக்காக மட்டுமே உங்களுடைய தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல்களை மூன்றாம் நபருக்கும் வெளிப்படுத்துகிறோம்:

  1. எங்கள் வணிகத்தின் ஆதரவுக்காக (ஆராய்ச்சி விற்பனையாளர் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு போன்றவை) நாங்கள் பயன்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு, அம்மூன்றாம் நபர் இந்த ரகசியகாப்பு கொள்கை விதிக்கேற்ப அதை கையாள்வதற்கும்  அதே நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்துவதற்கும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில்;
  2. சட்ட அமலாக்க கோரிக்கைகளுக்கு பதிலளிக்க அல்லது பொருந்தும் சட்டங்கள், நீதிமன்ற ஆணைகள், அல்லது அரசு நெறிமுறைகளுக்காக தேவைப்படும்போது.

இந்த ரகசியகாப்பு கொள்கையில் கருத்தில் கொள்ளப்பட்ட தகவல்களின் சேகரிப்பு, பயன்பாடு மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவை நீங்கள் வாழும் நாட்டுக்கு வெளியேயுள்ள சட்ட வரையறைகளுக்கு மாற்றம் செய்யப்படலாம். அங்கு தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல்கள் குறித்த சமமான சட்டங்களும் விதிகளும் இல்லாமலிருக்கலாம். இத்தகவலைப் கொடுப்பதன் மூலம், இந்த ரகசியகாப்பு கொள்கை விதிக்கேற்ற மாற்றங்களுக்கும் வெளிப்படுத்துதல்களுக்கும் நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள்.

ஆன்லைன் கண்காணிப்பு இணைய உலாவி “கண்காணிப்பு வேண்டாம்” சமிக்ஞைகள் அல்லது அது போன்ற வேறு பொறிமுறைகளுக்கு எங்கள் வலைத்தளம் தற்போது பதிலளிப்பதில்லை. “தகவல் பயன்படுத்தல் மற்றும் வெளிப்படுத்தல்” மற்றும் “குக்கீஸ்” பிரிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளது போல, மூன்றாம் நபர் வலைத்தளங்கள்  அல்லது ஆன்லைன் சேவைகளுடனான உங்கள் நடவடிக்கைகளை கண்காணிக்கக்கூடிய மற்றும் வலைத்தளத்துடனான உங்கள் அனுபவத்தை மேம்படுத்த எங்களுக்கு உதவக்கூடிய மென்பொருளை நாங்கள் பயன்படுத்துவோம்.

Google Adwords மறுவிற்பனை- எங்கள் வலைத்தளத்திற்கு விஜயம் செய்யும் பயனர்களுக்காக மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் (Google உட்பட) குறித்து விளம்பரம் செய்வதற்கு Throughthescriptures.com-ஆனது Google Adwords மறுவிற்பனை சேவையை பயன்படுத்துகிறது. இது, Google தேடல் முடிவுகள் பக்கத்தில் அல்லது Google-ன் காட்சி வலைப்பின்னலில் சேர்க்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் ஒரு பேனர் விளம்பரத்தில் ஒரு உரை விளம்பர வடிவில் இருக்கலாம். இந்த விளம்பரங்களுக்கு சேவை செய்ய, throughthescriptures.com-க்கு கடந்த முறை விஜயம் செய்தவரின் குக்கிகளின் அடிப்படையில் Google உதவுகிறது. Google Adwords மறுவிற்பனை கண்காணிப்பிலிருந்து விலக விரும்பினால், Google-ன் விளம்பர அமைப்புகள்-க்கு விஜயம் செய்யவும் .

அணுகல், திருத்தம் மற்றும் புதுப்பித்தல் உங்களுடைய தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல்களை துல்லியமாகவும், நிகழ்காலத்துக்கேற்றவாறும் முழுமையானதாகவும் வைத்திருக்க, அனைத்து புதிய தொடர்பு தகவல்கள் மற்றும் அடையாளம் காணக்கூடிய தகவல்களைக் கொண்டு வலைத்தளத்திலுள்ள பொருத்தமான படிவங்களை நிரப்புவதன் மூலம் இன்றைக்கான சத்தியத்தின் கோப்பில் உள்ள உங்கள் தகவல்களை புதுப்பிக்கவும்.

தரவு பாதுகாப்பு எங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களை, பரிமாற்றத்தின் போதும் மற்றும் நாங்கள் பெற்ற பிறகும், இழப்பு, தவறாகப் பயன்படுத்துதல், அங்கீகரிக்கப்படாத அணுகல், வெளிப்படுத்துதல், மாற்றம் அல்லது அழிப்பு இவைகளிலிருந்து பாதுகாக்க பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் நியமங்களைப் பின்பற்றுகிறோம். இணைய பரிமாற்றம் எப்போதுமே முழுமையான பாதுகாப்பானதல்ல அல்லது பிழையற்றது அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். குறிப்பாக, இத்தளத்திலிருந்து அனுப்பப்படும் அல்லது இத்தளத்தில் பெறப்படும் மின்னஞ்சல் பாதுகாப்பானதாக இல்லாமல் இருக்கக்கூடும். எனவே, உங்கள் தகவல்களை பாதுகாக்க ஏற்றுக்கொள்ளப்படும் வணிகரீதியான வழிவகைகளை பயன்படுத்த நாங்கள் பாடுபடுகின்றபோதிலும், அதன் முழுமையான பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க இயலாது.

உங்கள் தனிப்பட்ட தகவல்களை (பெயர், மின்னஞ்சல் முகவரி போன்றவை) புதுப்பிக்க, உங்கள் மின்னஞ்சல் முகவரியும் கடவுச்சொல்லும் தேவைப்படும். உங்கள் கடவுச்சொல்லை ரகசியமாகவும் பாதுக்காப்புடனும் வைத்திருங்கள்; யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வலைத்தளத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் ஏதேனும் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல்கள் இன்றைக்கான சத்தியத்திடமிருந்து நீங்கள் பெறும் மின்னஞ்சல்கள் வலைத்தளத்துடனான உங்கள் நடவடிக்கையைச் சார்ந்தேயிருக்கும், உதாரணத்திற்கு, ஒரு கல்விப் பிரிவை வாங்குவது அல்லது முடிப்பது.

குக்கிகள் குக்கி என்பது பதிவேட்டு பராமரிப்பு நோக்கங்களுக்காக பயனரின் கணினியில் சேமிக்கப்படும் ஒரு சிறிய உரை கோப்பாகும். வலைத்தளத்தில் நாங்கள் குக்கிகளைப் பயன்படுத்துகிறோம். குக்கிகளில் சேமிக்கப்பட்ட தகவல்களை, நீங்கள் வலைத்தளத்தில் இருக்கும்போது சமர்ப்பித்த எந்த ஒரு தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவலோடு நாங்கள் இணைப்பதில்லை.

நாங்கள் தொடர் குக்கிகளைப் பயன்படுத்துகிறோம். உங்களுடைய வன்-இயக்கியில் தொடர் குக்கி நீடித்த காலம் இருக்கும். இணைய உலாவியின் “உதவி” கோப்பில் அளிக்கப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் தொடர் குக்கிகளை நீக்க முடியும்.

குக்கிகளை நிராகரித்தால், வலைத்தளத்தை மேலும் பயன்படுத்த இயலும், ஆனால் வலைத்தளத்தின் சில பகுதிகளை பயன்படுத்தக்கூடிய திறன் மட்டுப்படுத்தப்படலாம். உதாரணத்திற்கு, குக்கிகளை செயல்படுத்தாமல் பயனரால் கல்விப் பிரிவில் சேரவோ அல்லது உள்நுழையவோ முடியாது.

மின்னியல் அல்லாத தகவல் பரிமாற்றங்கள் எங்கள் சார்பாக அஞ்சல்கள் மேற்கொள்வதற்கு வேறு நிறுவனங்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். அவர்கள் தங்களது செயல்பாடுகளை நிறைவேற்ற தேவைப்படும் தனிப்பட்ட தகவல்களை அணுக வேண்டி இருக்கலாம், ஆனால் வேறு பிற நோக்கங்களுக்காக அவற்றை பயன்படுத்த மாட்டார்கள்.

ரகசியகாப்பு கொள்கையில் மாற்றங்கள் அறிக்கையின் திருத்தப்பட்ட பதிப்பினை வலைத்தளத்தில் இடுகையிடுவதன் மூலம் இந்த ரகசியகாப்பு கொள்கையை எந்த நேரத்திலும் மாற்றுவதற்கும் புதுப்பிப்பதற்கும் எங்களுக்கு உரிமை உண்டு. இக்கொள்கையை வழக்கமாக பார்வையிடவும். தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல்களை அவை சேகரிக்கப்படும்போது கூறப்பட்ட முறைக்கு மாறாக பயன்படுத்த நாங்கள் தீர்மானித்தால், வலைத்தளத்தின் முகப்பு பக்கம்  அல்லது மின்னஞ்சல் மூலமாக அதனை நாங்கள் அறிவிப்போம்.

எங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க இன்றைக்கான சத்தியம் கடமைப்பட்டுள்ளது. உங்கள் தனியுரிமையை பாதுகாப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதால், எங்கள் ரகசியகாப்பு கொள்கை குறித்த உங்கள் கவலைகளை எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் சமர்ப்பிக்கலாம். நியாயமான அனைத்து கவலைகளுக்கும் கேள்விகளுக்கும் விரைவாகப் பதிலளிக்க இன்றைக்கான சத்தியம் முயற்சிக்கும்.

Truth for Today World Mission School, Inc.
P.O. Box 2044
Searcy, Arkansas
72145-2044, U.S.A.