பள்ளி் ஒன்றை எவ்வாறு தொடங்குவது

உங்கள் கிறிஸ்தவ சபை அல்லது சமுதாயத்தில் Through the Scriptures (TTS) பள்ளி ஒன்றை அமைக்க ஆர்வமாக உள்ளீர்களா? தொடங்குவதற்கான சில யோசனைகள் இங்கே உள்ளன!


என் கிறிஸ்தவ சபை அல்லது சமுதாயத்தில் உள்ளூர் Through the Scriptures பள்ளி ஒன்றை நான் ஏன் அமைக்க வேண்டும்?

தனது சொந்த நடையில் படிப்பதற்கு மாணவரை அனுமதிக்கும் வகையில் Through the Scriptures வடிவமைக்கப்பட்டிருந்தாலும், குழுச் சூழலில் ஒன்றாக படிப்பதால் பலர் பயனடைகிறார்கள். கூட்டுறவு மற்றும் தோழமையுணர்ச்சி நன்மைகள் மட்டுமே அல்லாமல், குழு இயக்கமானது தனிக் கல்வியால் முடியாத பல வழிகளில் முன்னோக்கிச் செல்வதற்கு மக்களை ஊக்கப்படுத்துகிறது மற்றும் தூண்டுகிறது. உள்ளூர் TTS பள்ளி அமைப்பது எல்லா வேறுபாட்டையும் வழங்கக்கூடிய மனிதக்கூறுகளை அளிக்கும்.


பள்ளி ஒன்றை அமைப்பதற்கான வெவ்வேறு சூழ்நிலைகள் யாவை?

  • ஒவ்வொரு கல்விப் பிரிவின் வழக்கமான நடையான 50 நாட்களில் முழு பைபிளையும் முடிப்பதை திருச்சபை உறுப்பினர்கள் மேற்கொள்ளும் நிலை-வேகப் பள்ளியை (நிலையான வேகத்தைக் கொண்ட பள்ளி) அமைக்கவும். மேலும் அதிக தகவல்களுக்கு அரையாண்டு கல்வி பக்கத்தைப் பார்க்கவும்.
  • பைபிள் படிப்பதற்காக மாணவர்கள் இரண்டு முதல் மூன்று வருட காலத்தை முழுமையாக செலவழிக்கும் முழு-நேர பள்ளியை அமைக்கவும். ஒவ்வொரு கல்விப் பிரிவுக்கும் 14 நாட்கள் என்ற வேகத்தில் மாணவர்கள் முன்னேறினால், பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தின் முழுமையான கல்வியையும் குறைந்தது இரண்டேகால் வருடங்களில் முடிக்கலாம். மாணவரின் பங்காக அர்ப்பணிப்பும் ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கைச் செலவுகளுக்கான ஆதரவும் இதற்கு தேவைப்படுகிறது.
  • தேவைப்படும் அடிப்படையில் கல்விப் பிரிவுகளை ஏற்பாடு செய்தல். எபிரெயர் மீது பைபிள் வகுப்பு உபதேசம் செய்ய உறுப்பினர் ஒருவர் தயாரா? எபிரெயர் மீதான நமது கல்விப் பிரிவில் அவரை சேர்க்கவும், அவரது வகுப்பின் உறுப்பினர்களை வகுப்புக்குத் துணைபுரிய  மிகவும் ஆழமான படிப்பிற்கு அவர் அழைக்குமாறு செய்யவும்! கிறிஸ்த்துவ சபை புதிய தலைவர்களை நியமிக்கப்போகிறதா? 1 மற்றும் 2 தீமோத்தேயு மற்றும் தீத்து மீதான எங்கள் கல்விப் பிரிவை எடுக்குமாறு உறுப்பினர்களை ஊக்கப்படுத்தவும்! புதிய கிறிஸ்தவர்கள் பைபிள் கற்பதை வாழ்க்கையின் நீண்ட பழக்கமாக வளர்க்க நீங்கள் உதவி புரிய விரும்புகிறீர்களா? எங்களுடைய கிறிஸ்த்துவின் வாழ்க்கை மற்றும் அப்போஸ்தலர் கல்விப் பிரிவுகள் தொடங்குவதற்கு மிகச் சிறந்த இடமாகும்!
  • பைபிள் கல்வியில் மிகவும் ஆழமாக நீண்ட காலம் நிற்கும் பெண்கள் வகுப்புகளில் அதைப் பயன்படுத்தவும்.
  • சில குறிப்பிட்ட தரநிலையுடன் வெற்றி பெறுவதற்காக சிறு நட்பு போட்டி ஒன்றின் மூலமாகவோ அல்லது ஒரு வித ஊக்குவிப்பின் மூலமாகவோ, கோடைக்காலத்தின் போது உயர்நிலைப் பள்ளி குழுக்களுக்கு அதைப் பயன்படுத்தவும். கோஸ்பெல் அல்லது அப்போஸ்தலர் மீதான கல்விப் பிரிவை இந்த வயதினர்க்கு பரிந்துரைக்கிறோம்.
  • வயதான குழந்தைகளைக் கொண்ட தம்பதிகள் மற்றும் குடும்பங்கள் ஒரே நேரத்தில் கல்விப் பிரிவிகளை எடுத்துக் கொள்ளலாம் மற்றும் படிப்பதற்கும் உரையாடலுக்கும் அடிக்கடி ஒன்றாகவே வரலாம்.
  • உள்ளூர் மதப்பிரச்சாரத்திற்கான தொடர்புக்காக இதைப் பயன்படுத்தவும். தனிப்பட்ட பைபிள் கல்வி அல்லது குறிப்பிட்ட வழிபாடு சேவையில் கலந்து கொள்வதில் முதலில் ஆர்வமில்லாத சில பேர் சில நேரங்களில் “கல்வி குழு”வின் ஒரு அங்கமாக இருப்பதற்கு மகிழ்ச்சியடைவர். இந்த வகையில், கல்விப் பிரிவுகளில் உபதேசிக்கப்படுவதை அவர்கள் அறிவார்கள், கூட்டங்களின் போது நடைபெறும் உரையாடலில் பங்கேற்பார்கள், மற்றும் மேலும் கற்பதற்கு வழி வகுக்கும் பரஸ்பர உறவை ஏற்படுத்திக்கொள்வார்கள். பைபிளின் ஆழமான கல்விப் பிரிவுகளில் ஆர்வம் கொண்ட சமுதாய மக்களை கண்டறிய முயற்சிக்கவும். குறிப்பிட்ட திருச்சபை கட்டிடத்திற்கு வர அஞ்சும் மக்களை ஊக்கப்படுத்துவதற்காக பொது இடங்கள் போன்ற “நடுநிலை” இடங்களில் உங்கள் கூட்டங்களை நடத்துவதற்கு ஆலோசிக்கவும்.
  • இக்கல்விப் பிரிவுகள் சமயபரப்பு துறையில் மிகச் சிறந்த வகையில் பயன்படுகிறது. பெரும்பாலும் மத சம்பந்தமான பயிற்சி அபூர்வமானவையாக உள்ளது அல்லது பல இடங்களில் கிடைப்பதில்லை, ஆனல் இத்திட்டம் உலகம் முழுதும் 23 மொழிகளில் கிடைக்கிறது. இளம் கிறிஸ்தவ சபைகள் எங்கள் கல்விப் பிரிவுகள் அளிக்கும் பைபிளின் ஆழமான கல்வியின் மூலம் பெரிதும் பயனடைவார்கள். ஒரு உள்ளூர் பள்ளியை நிறுவுதல் நல்ல கல்விப் பழக்கங்களை வளர்க்கத் தூண்டுவதில் குறிப்பாக உதவுகிறது. நீங்கள் ஆதரிக்கும் சமயபரப்பு குழுக்களுக்கு இத்திட்டம் குறித்து தெரியும் என்பதை உறுதிசெய்து கொள்ளவும்!
  • மற்ற திட்டங்களுக்குத் துணைபுரியும் பாடத்திட்டமாக எங்கள் கல்விப் பிரிவுகளை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, வெளிநாட்டின் சமயபோதகர் பயிற்சி திட்டத்திற்கு, மாணவர்கள் அத்திட்டத்தின் மொத்த கற்றல் அனுபவத்தைப் பெறுவதற்கு எங்கள் கல்விப் பிரிவுகளில் சிலவற்றை மேற்கொள்வது தேவைப்படுகிறது.

நான் எவ்வாறு தொடங்குவது?

ஏற்பாடு செய்யக்கூடிய, ஊக்கப்படுத்தக்கூடிய மற்றும் Through the Scriptures-உடன் பைபிள் படிப்பது குறித்து பெருமகிழ்ச்சியடையும் “டீன்”-ஆக சேவைபுரியக்கூடிய ஒருவரை (ஒருவேளை நீங்களாகவும் இருக்கலாம்) கண்டறியவும். டீன் பின்வரும் செயல்பாடுகளை கொண்டுள்ளார்:

  1. குழுவில் இணைய மக்களை சேர்த்தல்.
  2. குழு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல்.
  3. பணியில் நிலைத்திருக்க குழுவை ஊக்கப்படுத்துதல்.
  4. தேவைப்படும் போது குழு உறுப்பினர்களுக்கு கல்விப் பிரிவுகளில் உதவுதல், கணினி பயன்பாடு, ThroughTheScriptures.com-உடன் கணக்கை உண்டாக்குதல் அல்லது மற்ற ஆன்லைன் பணிகளில் உதவுதல் போன்றவை.

இணைவதில் ஆர்வமுள்ள மக்களை நான் எவ்வாறு பெறுவது?

வார்த்தையை வெளியிடவும். சபையில் அறிவிப்பு வெளியிடவும், தேவாலய அறிக்கை வெளியீடுகள், PowerPoint அறிக்கைகள் மற்றும் தேவாலய வலைத்தளத்திலும் அறிவிப்பு வெளியிடவும். ஆர்வம் கொள்வதற்கான சாத்தியக்கூறு உள்ளவரை தனியாக சந்தித்து பேசுவதே பங்கேற்பாளரை பெறுவதற்கான மிகவும் பயனுள்ள வழியாகும். மற்ற கிறிஸ்துவ சபைகளுக்கும் சென்றடையுமாறு செய்யவும். முடிந்தால், தன்னுடைய சபையில் இதனை பரப்புவதற்கு உங்களுக்கு உதவ தூண்டப்பட்ட ஒருவரை ஒவ்வொரு கிறிஸ்துவ சபையிலும் கண்டறியவும். தேவாலயத்திற்கு வெளியே உள்ள மக்களை அழைப்பதற்கும் நீங்கள் ஆலோசிக்கலாம். இரட்சகரின் தேவாலயத்தில் உறுப்பினரல்லாத பலரும் இவ்வகையான பைபிள் கல்வியில் ஆர்வம் கொண்டிருக்கலாம், மேலும் இது பைபிளை உங்களுடன் சௌகரியமாக படிப்பதற்கு அவர்கள் பெறும் சரியான வாய்ப்பாக இருக்கும். பைபிள் கல்வியில் குறிப்பான ஆர்வம் உள்ள தேவாலயப் பெரியவர்களில் ஒருவரை கண்டுபிடித்து கல்விப் பிரிவு ஒன்றை அவரே முயற்சி செய்யுமாறு அழைக்கவும். அவர் ஒரு கல்விப் பிரிவை முடித்தால், ஒரு பள்ளியை நிறுவுவதில் மிகப்பெரிய ஆதரவாளர்களில் ஒருவராக அவர் பெரும்பாலும் இருப்பார். பங்கேற்க விரும்பும் அவர்களின் உறுப்பினர்கள் சிலருக்கு அல்லது அனைவருக்கும் முதல் கல்விப் பிரிவுக்கான கட்டணம் செலுத்த ஒரு கிறிஸ்துவ சபை விரும்பக்கூடும். பொருளாதார சுமையுள்ளவர்களுக்கு இருக்கும் சாத்தியமுள்ள தடையை இது நீக்கும். ஒரு குறிப்பிட்ட தரநிலையுடன் ஒவ்வொரு கல்விப் பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு, பைபிள் கல்வியை விடாமுயற்சியுடன் தொடர்வதை தூண்டும் வகையில், கல்விப் பிரிவுகளின் கட்டணத்தை தொடர்ந்து செலுத்தவும் கூட கிறிஸ்தவ சபை விரும்பலாம்.


ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்த பிறகு நான் என்ன செய்ய வேண்டும்?

குழு ஒன்றாக இணைந்து எடுக்கவிருக்கும் TTS கல்விப் பிரிவுகளை அனுமதிக்கவும், நீங்களும் சேர்ந்து படிப்பதற்கு ஏதுவாக, கல்விப் பிரிவை அனைவரும் தொடங்கும் ஒரு குறிப்பிட்ட நாளை ஏற்பாடு செய்யவும். எவ்வாறு உள்நுழைவது என்பதை விளக்கவும் மற்றும் சிரமம் இருக்கக்கூடிய யாருக்காவது உதவி செய்யவும். வாராந்திர கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யவும். சில குழுக்கள், தேவாலயத்தின் வழிபாடு சேவைகளில் ஏதேனும் ஒன்றை செய்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு சந்திப்பதை தேர்ந்தெடுக்கலாம். சனி, ஞாயிறு தவிர்த்த வேறு ஏதேனும் வாரஇரவை மற்றவர்கள் தேர்ந்தெடுக்கலாம். பங்கேற்க விரும்புபவர்களுக்கான சிறந்த நேரத்தை கண்டறிய முயற்சிக்கவும்.  இடத்திற்கும் அவ்வாறு செய்வதே சரியாகும்: தேவாலய கட்டிடத்தில் சந்திப்பதை சிலர் விரும்புவர், மற்றவர்கள் உறுப்பினர்களின் வீடுகளில் அல்லது வேறு பிற இடத்தில் சந்திப்பதை விரும்புவர்.


வாராந்திர கூட்டங்களில் நாம் என்ன செய்கிறோம்?

கல்விப் பிரிவுகளின் கற்றலை ஆதரிப்பதும் ஊக்கப்படுத்துவதுமே ஒட்டுமொத்த குறிக்கோளாகும். தேர்வுகளின் தயாரிப்புக்காக கல்வி வழிகாட்டல்களை படித்து, கிரகித்துக் கொள்வதற்கு கடினமாக இருக்கும் தலைப்புகளை புரிந்துகொள்ள ஒருவருக்கொருவர் உதவவும். பெரும்பாலான குழுக்கள், கல்விப் பிரிவிலிருந்து அந்த வாரம் படித்த சிலவற்றிலிருந்து பக்தி செய்தி ஒன்றை சேர்க்க, எல்லாரும் இணைந்திருக்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்துவர். ஒவ்வொரு வாரமும் பக்தி செய்தியை வெவ்வேறு மக்கள் மாறி மாறி வழங்குவர். நட்புணர்வு மற்றும் தோழமைஉணர்வைத் தூண்டுவது உங்கள் வாராந்திர கூட்டங்களை நடத்துவதற்கான காரணங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தாலும், காபி, சிற்றுண்டி, அல்லது ஒருவேளை ஒரு கல்விப் பிரிவு முடிவடைந்த பிறகான களிப்பு நிறைந்த உணவு போன்ற மற்ற நடவடிக்கைகளையம் எப்போதாவது சேர்த்துக்கொள்ள நீங்கள் விரும்பலாம். இக்கூடுதல் விஷயங்களின் ஏற்பாடுகள் உங்கள் கூட்டத்தின் முதன்மை நோக்கத்தை அழிப்பதில்லை அல்லது மக்கள் கைவிடும்போது மிகவும் கோரப்படுகின்றவையாக இருப்பதில்லை என்பதில் கவனமாக இருக்கவும்.


இந்த யோசனைகள் வெறும் பரிந்துரைகளே. முக்கிய மூலப்பொருளை நாங்கள் வழங்குவதும், உங்கள் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் உள்ளூர் பள்ளியை நீங்கள் பயன்படுத்துவதுமே இத்திட்டத்தின் அழகாகும். எங்களுடைய ஏதாவது யோசனைகள்  அல்லது உங்கள் சொந்த யோசனைகளில் சில குறிப்பாக நன்றாக வேலை செய்ததா? அது குறித்து கேட்க விரும்புகிறோம்! எங்கள் கருத்து பக்கம் மூலமாக எங்களுக்கு கூறவும்.